சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் உட்பட பல பிரபலங்களின் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ’புலி’.
விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது கிராபிக்ஸ் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே, படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து பல்வேறான செய்திகள் பரவி வந்தது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழு ’புலி’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் 20ஆம் தேதி இரவு 12 மணிக்கும், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீஸர் 21ம் தேதி இரவு 12 மணிக்கும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், ’புலி’ கெட்டப்பில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த புகைப்படங்களுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் ரசிகர்கள் பலரும் அப்படங்களை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பதிவு செய்து வருகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை கணக்கில் கொண்டு ’புலி’ படத்தை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.
Related posts
No comments:
Post a Comment