Monday, 15 June 2015

புல் கட்டு கட்டும் இஞ்சி இடுப்பழகி..!

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் அனுஷ்கா தற்போது ‘ருத்ரமாதேவி’,‘பாகுபலி’ ஆகிய பிரமாண்ட படங்களில் நடித்துள்ளார். இவ்விரு படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீஸாக இருக்கிறது. இதில் பாகுபலி படம் கூடிய விரைவில் ரிலீஸாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிவிபி நிறுவனத்திற்காக ‘சைஸ் ஜீரோ’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் அனுஷ்கா. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகவிருக்கிறது. மேலும் இதற்கு முன்புவரை உடம்பை சிக்கென்று வைத்திருந்த அனுஷ்கா இப்படத்திற்காக உடல் எடையை அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் இயக்குநர் அனுஷ்காவிடம் 15 கிலோ ஜாஸ்தியாக வேண்டும் என்று கூறி விட்டதால், இதுவரை வெயிட் போடும் உணவுகளை கண்ணால் பார்ப்பதைகூட தவிர்த்து வந்த அனுஷ்கா, தற்போது அந்த உணவுகளை தேடிப்பிடித்து புல் கட்டு கட்டிக்கொண்டிருக்கிறாராம். அதுவும் non-veg என்றால் மூக்கை முட்டும் அளவிற்கு சாப்பிடுகிறாராம் அனுஷ்கா.

No comments:

Post a Comment