தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா தற்போது ஒரே நேரத்தில் பாகுபலி மற்றும் ருத்ரம்மா தேவி என இரண்டு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பாகுபலி படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. அதேபோல் ருத்ரம்மா தேவி படமும் கூடிய விரைவில் வெளிவர தயாராகிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் நடிகை அனுஷ்கா வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு ராணி வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
போதாதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் இதில் ஒரு சிறப்பு வேடத்தில் வருகிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இப்படம் ஓரளவு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இதில் நடிப்பதற்கு இதுவரையில் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கும் அனுஷ்காஅதற்குப் பதில் படத்தின் லாபத்தில் பங்கு கேட்கிறாராம். படம் எப்படியும் நல்ல லாபத்தைக் கொட்டிக் கொடுக்கும் அதனால் சம்பளம் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கும் அனுஷ்கா, வசூலில் ஒரு குறிப்பிட்ட தொகையை எதிர்பார்க்கிறார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment