ஜூன் 21
உலக இசை தினம்..!!
“இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது, அமைதியாகவும் இருந்திட முடியாது’ என இசை குறித்து மறைந்த பிரெஞ்ச் கவிஞர் விக்டர் ஹியூகோ குறிப்பிட்டார். இசை இல்லாமல் வாழ்ந்திட முடியுமா நிச்சயமாக முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசையில், வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
எப்படி தோன்றியது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது, மனிதன் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. பறவைகளின் சத்தம் ஒருவிதமாகவும், விலங்குகளின் சத்தம் ஒரு விதமாகவும் இருக்கும். கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் பயணிக்கிறது.
இசைகள் பலவிதம்: பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை, நவீன இசை என பல பரிமாணம் உருவானது. ஒவ்வொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, தென்னிந்தியாவின் கர்நாடகா இசை பின்பற்றப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1788 – நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது.
1898 – குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது.
1999 – ஆப்பிள் நிறுவனம் தனது முதல் iBook-கை வெளியிட்டது.
2002 – உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.
சிறப்பு தினம்:
உலக யோகா தினம்.
கிரீன்லாந்து தேசிய தினம்.
Related posts
No comments:
Post a Comment