சமீபகாலமாகவே நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள், நிர்வாண செல்ஃபிக்கள் இணையதளத்திலும், வாட்ஸ் அப்பிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகைகள் அது தன்னுடைய படம் அல்ல. அவை மார்பிங் செய்யப்பட்ட படங்கள் என்று கூறினாலும், அவர்கள் நடிகைகள் என்பதால் கோடிக்கணக்கானோருக்கு ஷேர் செய்துவிடுகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு த்ரிஷாவின் நிர்வாண குளியல் வீடியோ வந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
அதைத்தொடர்ந்து வசுந்தரா, லட்சுமி மேனன், ஹன்சிகா, அனுஷ்கா என்று பல நடிகைகளின் ஆபாச படங்கள் வெளிவந்தன. கோலிவுட் சினிமா மட்டுமில்லாமல் மலையாள சினிமாவையும் இந்த ஆபாச நோய் விடவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள நடிகையான ரக்சனா நாராயணன்குட்டி என்பவரின் ஆபாச புகைப்படம் வெளியாகி அவருக்கு மட்டுமல்ல, கேரள திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த சுவடு மறைவதற்குள்ளாகவே மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான ‘நீ-நா’ படத்தில் அறிமுகமாகிய தீப்தி சதி என்பவருடைய ஆபாச படம் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் தான் என்றாலும் சினிமாவுக்கு முற்றிலும் புதியவரான தீப்தி அதிர்ந்து போயுள்ளார்.
“இதெல்லாம் எனக்கு புதுசு.. அதனால் கொஞ்சம் பயமாகவும் கூட இருக்கிறது. என்னைவிட என் பெற்றோர்கள் இதனால் ரொம்பவே கவலையடைந்துள்ளார்கள்.” என்கிற தீப்தி, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் லால்ஜோசிடம் கலந்து பேசி, இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் அளிக்கவுள்ளாராம்.
Related posts
No comments:
Post a Comment