விஜய் தற்போது புலி படத்தில் நடித்துள்ளார் என்பதை அனைவரும் அறிவர். சிம்வுதேவன் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவேகமாக வளர்ந்து வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்துள்ளனர். விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலையாவது பாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் விஜய் இந்தப் படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளாராம். வைரமுத்து எழுதியுள்ள அந்த பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ‘ரசிகன்’ படத்தில் ரசிகர்களுக்காக பாடிய விஜய் இன்றுவரை ஒரு பாடகராகவும் தொடர்ந்து வருகிறார்.
இவர் பாடிய ‘கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன்…’, ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா…’, ‘கண்டாங்கி… கண்டாங்கி…’, ‘செல்ஃபிபுள்ள…’ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் ஹிட்டானது. அந்த வரிசையில்'புலி' படத்தின் பாடல் இடம்பெருமா..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 
No comments:
Post a Comment