Friday, 5 June 2015

20 தமிழர்களை கொன்று குவித்த ஆந்திராவில் ஷூட்டிங்கா..? அஜித் அதிரடி..!


சமீபத்தில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை அநியாயமாக சுட்டுக் கொன்றனர் ஆந்திர போலீஸ். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு இன்னும் நடந்து வருகிறது. இந்த நிலையில் 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திராவில் ஷூட்டிங் வேண்டாம் என்று தெரிவித்துள்ளாராம் அஜித்.
அஜித் தற்போது வீரம் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறீவர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அஜித்தின் தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கிறார். கடந்த மாதம் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
இதில் அஜித், லட்சுமி மேனனின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடக்க உள்ளதாகவும், சீனாவில் நடக்க உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் அஜித்தை பற்றிய ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் சில காட்சிகளை ஆந்திராவில் படமாக்க திட்டமிட்டிருந்தாராம் சிவா. இதை அறிந்த அஜித் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட ஆந்திராவில் படப்பிடிப்பா..? வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
அதற்கு பிறகு தான் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவிற்கு சிவா மாற்றியதாக தகவல்கள் கூறுகிறது. அதோடு இப்படத்தில் காமெடியை சற்று தூக்கலாக வைக்குமாறு சிவாவிடம் அஜித்தெரிவித்துள்ளாராம். இதையடுத்து தான் கூடுதலாக மொட்டை ராஜேந்திரன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோரை இப்படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் சிவா.

No comments:

Post a Comment