ஜூன் 20
உலக அகதிகள் தினம்..!!
இரண்டாம் உலப்போரின் போது அர்மீனியா, துருக்கி மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வாழும் மக்கள் அடைக்கலம் தேடி பெரு மளவில் இடம்பெயர்ந்தனர். கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக் குள் நுழைய துவங்கியதும் உள்ளூர் மக்களுக்கும் அடைக்கலம் தேடி வருபவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது, முக்கியமாக அர்மீனியர்கள் மக்கள் மீது அந்த நாட்டு ஒட்டமன் அரசு தொடுத்த இனப்படுகொலை தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக துருக்கி, மற்றும் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய அதன் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இம்மோதல்களை முடிவிற்கு கொண்டு வரவும், அகதிகள் நலனைக் காக்கவும் சட்டப்பூர்வமான குழு ஒன்றை அமைக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது, இதனடிப் படையில் 1951-ம் ஆண்டு UNHCR ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பாதுகாப்பு அமைப்பு உருவானது.
இந்த அமைப்பு அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது, போன்ற முக்கிய பணிகளை செய்து வந்தது, 1950 களுக்கு பிறகு பல ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரமடைய ஆரம்பித்தன. உள்நாட்டுப்போர்கள் ஆரம்பமாகின.
இதன் காரணமாக 20ம் நூற் றாண்டின் பிறபகுதியில் கானா, சோமாலியா, சூடான், மொராக்கோ, சியோரா லியோன், ஐவரி கோஸ்ட், உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வன்முறைக்கு பலியாகினர். உயிர் பாதுகாப்பு தேடி அருகில் உள்ள நாடு களுக்கு அடைக்கலம் புகுந்த மக்கள் தொகை ஒரு கோடியை தொட்டது, 1980களில் இருந்து ஆப்பிரிக்க அகதிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வந்தது, 2001 ஜூன் 20 முதல் ஆண்டு தோறும் உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளின் நிலையை மனதில் கொண்டு உலக அகதிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போதைய கணக்கீட்டின் படி உலகம் முழுவது சுமார் 4 கோடிக்கும் மேற்பட்ட அகதிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துக்கொண்டு உயிர்வாழ்கின்ற்னார். இன்று ஆப்கான், பர்மா, பாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1837 – விக்டோரியா பிரித்தானியாவின் அரசியாக முடி சூடினார்.
1858 – இந்தியச் சிப்பாய் கலகம், 1857 முடிவுக்கு வந்தது.
1863 – மேற்கு வேர்ஜீனியா ஐக்கிய அமெரிக்காவின் 35வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.
1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார்.
1990 – யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறப்பு தினம்:
அர்ஜெண்டினா கொடி நாள்.
Related posts
No comments:
Post a Comment