Saturday, 20 June 2015

கர்நாடக அரசிடம் வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ் படம் காக்கா முட்டை!!

சமீபத்தில்  வெளியான ‘காக்கா முட்டை’ படத்துக்கு கர்நாடக அரசு முழுமையான வரிச்சலுகை அளித்துள்ளது. கர்நாடகாவில் வேற்று மொழிப் படம் ஒன்றுக்கு முதல்முறையாக இந்தச் சலுகை கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.   உலக சினிமாவிற்கு நிகராக ஒரு தமிழ் சினிமா என்று கூட சில பிரபலங்கள் புகழ்ந்து வருகின்றனர். வசூலிலும் இப்படம் பட்டைய கிளப்பிவருகின்றது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பல விருதுகளை குவித்த  இப்படம் விரைவில்  கன்னடத்திலும் வெளியாகவுள்ளது.
காக்கா முட்டை படத்தை தமிழ் ரசிகர்கள் மட்டு மில்லாமல் பிறமொழி ரசிகர்களும் விரும்பி பார்க்கின்றனர். இருவாரங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் வெளியான இந்தப் படம், கன்னட இலக்கியவாதிகளால் வெகுவாக பாராட்ட‌ப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘ விளிம்பு நிலை மக்களின் வாழ்வையும் ஏழை சிறுவர்களின் வலியையும் சிறப்பாக விளக்கிய ‘காக்கா முட்டை’ திரைப்படத்துக்கு வரிவிலக்கு வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இப்படத்தை விநியோகம் செய்த ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவின் தலைமை செயல் அதிகாரி விஜய் சிங் கூறிய போது, ”எங்களுடைய திரைப்படத் துக்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. எதிர்பாராமல் வந்த இந்த அறிவிப்பால், ‘காக்கா முட்டை’படத்தை கன்னட மக்களும் கண்டு ரசிப்பார்கள்.
கன்னட மொழி அல்லாத வேற்று மொழி படத்துக்கு கர்நாடகத்தில் வரிவிலக்கு அளிப்பது இதுவே முதல்முறை. அதிலும் தமிழ்மொழி படத்துக்கு வரிவிலக்கு அளித்த தில்லை என நினைக்கிறேன். இந்த சிறப்பான ஆணையை பிறப்பித்த கர்நாடக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

No comments:

Post a Comment