தனுஷ் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ’காக்கா முட்டை’ இப்படம் சென்ற வெள்ளி கிழமை (ஜூன் 5) வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பல தேசிய விருதுகளை வென்றது.
வெளியாவதற்கு முன்பாகவே இப்படம் பல விருதுகளை வென்றதால், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாகியது. இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. மேலும், தமிழகத்தில் மட்டும் 100 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
’காக்கா முட்டை’ தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் வசூலாக, ரூ.90 லட்சங்களை வசூலித்துள்ளது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இப்படத்தில் அந்தளவிற்கு எந்த ஒரு பிரபலமான நடிகர்களும் நடிக்க வில்லை என்பது தான்.
இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்பு ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment