Friday, 5 June 2015

ஹிருத்திக் ரோஷனுடன் தீபிகா படுகோனே ரொமான்ஸ்..!


பாலிவுட்டின் செக்ஸி பாயான ஹிருத்திக் ரோஷனுடம் ஜோடி சேர இருக்கிறார் தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.
இப்படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், தூம் படங்களை போன்று தொடர்ச்சியாக இப்படத்தை எடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆக்‌ஷன் ஃபிலிம்மாக உருவாக இருக்கும் இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக தீபிகாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்தது வருகிறது. இதுதொடர்பாக அவரிடமும் பேசி வருகின்றனர். தீபிகாவுக்கும் இந்தபடத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.
ஆனால் இன்னும் உறுதி செய்யவில்லை, அதேசமயம் தற்போது தீபிகா, தமாஷா படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை, அதனால் நிச்சயம் இந்தப்படத்தில் நடிப்பார் என்கிறார்கள். ஆக்‌ஷன் பிலிம்மாக உருவாக இருக்கும் இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்க இருக்கிறார்.

No comments:

Post a Comment