Sunday, 14 June 2015

ஃபோர்ப்ஸ் நாளிதழில் ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளிய அஜித்!!

சமூக வலைத்தளங்களில் இன்று காலை முதல் திடீரென இந்தத் தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியல் இன்று ஏன் பரவி வருகிறது என்பதற்கான காரணம் தெரியவில்லை. ஒருவேளை வழக்கம் போல, அஜித், விஜய் ரசிகர்கள் யாராவது கிளப்பி விட்டு விட்டார்களோ…இருந்தாலும் அவர்களுக்காகவே அந்தப் பட்டியலின் சுருக்கமான தகவல்.
ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள இந்தியாவின் 2014ம் ஆண்டிற்கான செலிபிரிட்டி பட்டியலில், வருமானத்தின் அடிப்படையிலும், பண வரிசை அடிப்டையிலும் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு அஜித் முன்னிலையில் உள்ளார். ஆனால், அவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஏ.ஆர்.ரகுமான் தமிழ்க் கலைஞர்கள் வரிசையில் முன்னிலை பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் தனுஷும் இடம் பிடித்திருப்பது ஆச்சரியமான ஒன்று.
பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகும், சில ஆய்வுகளின் அடிப்படையிலும் 2013ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் 2014ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் எடுத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய அளவில் வருமானம், புகழ் அடிப்படையில் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார்.
தமிழகத்தில் உள்ள பிரபலங்கள் பட்டியல்!!
ஏ.ஆர்.ரகுமான் 50 கோடி
ஏ.ஆர்.முருகதாஸ் 44.33 கோடி
அஜித் 40.33 கோடி
ரஜினிகாந்த் 37 கோடி
விஜய் 33 கோடி
தனுஷ் 11.67 கோடி
பிரபுதேவா 9.83 கோடி

No comments:

Post a Comment