ஜூன் 9
டொனால்ட் டக் காமிக்ஸ் வெளியானது!!
வால்ட் டிஸ்னியின் முதல் வெற்றிகரமான கதாபாத்திரம் மிக்கி மவுஸ் தான் என்றாலும், மிக அதிகளவில் வெற்றிகரமான கதாபாத்திரம் டொனால்ட் டக் தான். டிஸ்னியின் கார்ட்டூன் திரைப்படங்களிலும் இதுதான் அதிகமாகத் தோன்றியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சாதனை நாயகன் உருவானதுக்குக் காரணம் யார் தெரியுமா? இன்னொரு சாதனை நாயகன். அவர்தான் உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பேட்ஸ்மேன் பிராட்மேன் தான்.
வால்ட் டிஸ்னியின் உன்னதமான படைப்பு மிக்கி மௌஸ். உலகெங்கும் உள்ள குழந்தைகளின் ஆதர்ச நாயகனாக மாறியதில் இருந்து, அந்தக் கதைகளை மிகுந்த கவனத்துடன் கையாள ஆரம்பித்தார் அவர். அந்தக் கதை வரிசையில் எதிர்மறைக் கருத்துகளோ, எதிர்மறை எண்ணங்களோ தோன்றாமல் பார்த்துக்கொண்டார். அதனால் தன்னுடைய வழக்கமான பாணியில் (கோபம் கொள்வது, சரமாரியாகத் திட்டுவது, முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட்டு ‘பல்ப்’ வாங்குவது) இருந்து ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை உருவாக்க நினைத்தார்.
இந்த எண்ணத்துடன் அன்றைய நாளிதழைப் புரட்டிக்கொண்டிருந்தார் வால்ட் டிஸ்னி. 1932-ம் ஆண்டில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டொனால்ட் பிராட்மேன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது, நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு காட்சிப் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ‘டக்' அவுட் ஆனார். நாளிதழில் டொனால்ட் ‘டக்' அவுட் என்று தலைப்புச் செய்தியாக வந்திருந்தது. உடனே தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ‘டொனால்ட் டக்' என்ற பெயரைச் சூட்டினார் வால்ட் டிஸ்னி.
இந்த காமிக்ஸ் முதன் முதலாக, 1934 ஜூன் 9ஆம் தேதி வெளியானது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் இன்றைய தினம்:
1935 - வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.
1945 – இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி பிறந்தார்.
1962 - தங்கனீக்கா குடியரசாகியது.
No comments:
Post a Comment