சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகை டாப்ஸி மீண்டும் தமிழ் திரையுலகில் நடிப்பை தொடர்ந்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் டாப்ஸிக்கு குழந்தை பிறந்து விட்டதாக செய்திகள் பரவின.
நடிகை டாப்ஸிக்கும் வெளிநாட்டு பேட்மிட்டன் வீரர், மத்தியாஸ் போ-வுக்கும் நீண்ட நாள் நட்பு உள்ளது. ஆனால், அந்த நட்பு மிக நெருக்கமாகி, குழந்தை வரை சென்று விட்டதாக செய்திகள் பரவின. ஆனால் உண்மையில், மத்தியாஸின் இணை வீரரான கேர்ஸ்டனுக்குக்கும் அவரது மனைவிக்குமே குழந்தை பிறந்துள்ளது.
இதனையே மீடியாக்கள் அப்படி எழுதியுள்ளது. இதனை அறிந்த டாப்ஸி, ‘எனக்கே தெரியாமல் எனக்கு குழந்தையா?? எனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இன்னும் நாள் இருக்கின்றது. தற்போது, நான் தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றேன்.’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment