Saturday, 6 June 2015

நடிகை ஆர்த்தி அகவர்வால் திடீர் மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி


’பம்பரக் கண்ணாலே' படத்தில் நடித்த ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் திடீர் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
1984-ல் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில் பிறந்தவர் ஆர்த்தி அகர்வால். 2001-ல் பாகல்பன் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். அடுத்து வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையானார்.
தமிழில் பம்பரக் கண்ணாலே படத்தின் மூலம் 2005-ல் அறிமுகமானார். இந்த படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் கடந்த 2007-ல் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். சமீபத்தில்தான் ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார். இப்படம் நேற்றுதான் ரிலீஸானது.
இந்த நிலையில் ஆர்த்தி அகர்வால் உடல் நலக் கோளாறு காரணமாக அமெரிக்காவில் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆஸ்த்மா கோளாறு என்பதால் மரணமடைந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு பக்கம், லைப்போசக்‌ஷன் எனும் கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சை செய்ததன் காரணமாகவே, மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் கூறுகிறார்கள். ஆர்த்தி அகர்வாலின் மரணம், தெலுங்கு திரையுலகை அதிர வைத்துள்ளது.

No comments:

Post a Comment