தன் சமூகத்தில் நடக்கும் கௌரவக் கொலைகள் உட்பட பல சமூக விரோத செயல்களை தோலுரிக்கும் விதமாக தன் படைப்புகள் மூலமாக வெளிப்படுத்தி வருபவர் பாலிவுட் இயக்குநர் வினோத் கப்ரி. சமூகத்தை மாற்ற நினைக்கும் இளம் தலைமுறை சினிமா இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
இவர் தற்போது உண்மை சம்பவத்தை அடைப்படையாக வைத்து “Miss Tanakpur Haazir Ho” என்ற படத்தை இயக்கியிருக்கிறார். வருகிற ஜூன் 26-ம் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அந்த டிரைலரில் மாட்டை பலாத்காரம் செய்துவிட்டதாக இளைஞன் ஒருவன் தண்டிக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் தங்கள் ”காப் பஞ்சாயத்து” அமைப்பை இழிவு படுத்துவதாக கூறி அதன் தலைவர் ராஜூ அகலாவத் இயக்குனரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 51 எருமைகள் பரிசாக வழங்கப்படும் என்ற வினோத அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கணக்கு வழக்கில்லாமல் கவுரவக் கொலைகள் செய்வது, 50 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மீது ஊர்வலமாக கொண்டு செல்வது, முசாபர் நகர் கலவரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது, என்று அரசின் எந்த அதிகாரத்திற்கும் கட்டுப்படாமல், வட இந்திய கிராமங்களில் தனித்து அதிகாரம் செலுத்தும் ஒரு அமைப்பு தான் இந்தக் ’காப் பஞ்சாயத்து’.
அவர்கள் செய்யும் குற்றங்களை வைத்துதான் வினோத் கப்ரி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அதனால் தான் அந்த அமைப்பு அவர் மீது கொலை வெறியில் சுற்றுகிறது அந்த அமைப்பு.
இந்த படத்தின் டிரைலரை நீங்களே பாருங்க..
Related posts
No comments:
Post a Comment