யோகா பாஜக தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போன்றவர்களுக்கு தான் யோகா தேவை என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லல்லு பிரசாத் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, ’யோகா வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் தேவையில்லை. ஏன்னென்றால் அவர்களுக்கு உடலில் கொழுப்பு இல்லை. நாட்டில் பல கோடி மக்கள் உண்ண உணவு கூட இன்றி தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு முதலில் தேவை உண்ண உணவும் வாழ்வதற்கு வழியும் தான், நிலம் இல்லாத விவசாயிகள், தொழிலாளர்கள், பால் வியாபாரி, ரிக்ஷாகார்களுக்கெல்லாம் தொப்பை இல்லை.
ஏனென்றால் அவர்கள் கடின உழைப்பாளிகள், அவர்கள் யோகா செய்ய வேண்டிய அவசியம் என்ன? பா.ஜ.க தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுக்குத்தான் கொழுப்பு அதிகம் உள்ளது எனவே அவர்கள் யோகா செய்யட்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.
இதே போல சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வேறு விதமாக கருத்து தெரிவித்து உள்ளார்.
’யோகா பயிற்சி வசதியான குடும்பத்தில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் சோம்பேறிகளுக்கு சரியாக இருக்கும். ஏனென்றால் திறந்த வெளியில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரம் இருப்பது இல்லை. ஆனால் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உடல் வியர்வை சிந்தி வேலை செய்கிறார்கள். அதுவே அவர்களுக்கு உடற்பயிற்சி தான். அதனால் அவர்கள் இந்த யோகா பயிற்சியை செய்ய தேவை இல்லை.’ என்று கூறியுள்ளார்.
Related posts
No comments:
Post a Comment