தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா.. இவருடைய நடிப்பில் விரைவில் பாகுபலி படம் வெளிவரவிருக்கிறது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கும் இப்படத்தை இயக்குநர் ராஜமெளலி இயக்கியுள்ளார்.
இப்படத்தை பெரிதும் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அனுஷ்காவிற்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளதாகவும் அடுத்த வருடம் ஆரம்பத்தில் திருமணம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதோடு அனுஷ்காவிற்கு ரகசியமாக காதலன் இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ளார் அனுஷ்கா...
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராகியுள்ள பாகுபலி படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அனுஷ்கா இது குறித்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஒரு பெண்ணின் வாழ்க்கையில், திருமணம் முக்கியமான அம்சம். எனக்கு திருமண பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கடந்த 6 வருடங்களாக பேசி வருகிறார்கள்.
நான் ரகசியமாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எல்லோருக்கும் தெரிகிற மாதிரி முறைப்படி அறிவித்துவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணமாக இருந்தாலும் சரி, என் திருமணத்தை நானே அறிவிப்பேன் என்று கூறினார் அனுஷ்கா.
No comments:
Post a Comment