Tuesday, 9 June 2015

சான்ஸ் கேட்டு சென்ற நடிகையிடம் வம்பு செய்த இயக்குநர்.. திட்டிய நடிகை

வெற்றி சூடவா படத்தில் களவாணி நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானவர் இந்த இனிமையான நடிகை. மலையாள நடிகையான இவர் அதற்கு முன்பே ஸ்ருதி என்ற பெயரில் இரண்டு படங்களில் ஒரு சில வேடங்களில் நடித்திருந்தாலும் வெற்றி சூடவா படம் அவரை பெரிய நடிகையாக்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதையடுத்து அவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவியது. தொடர் தோல்வி இனிமையான நடிகையின் மார்க்கெட்டை சரித்தது. அதனால்தான் நான் ரெட் மனிதன் படத்தில் வில்லியாக நடித்த அவர், தற்போது கேரக்டர் நடிகை போன்று மூன்று ஹீரோயின்களில் ஒருவராக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சி குத்தாட்டம் போடவும் ரெடியாகிவிட்டார்.
இந்தநிலையில், மீண்டும் மெயின் ஹீரோயினாக முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க அவர் சில இயக்குநர்களை சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார். அப்படி சான்ஸ் கேட்டு சென்ற இடத்தில் ஒரு இயக்குநர், அவரை பார்த்தவர், உடம்பு இப்படி ஆன்ட்டி மாதிரியிருந்தால் எப்படி ஹீரோயின் சான்ஸ் தர முடியும்.
அதனால் முதலில் உடம்பை ஸ்லிம் பண்ணிவிட்டு வாங்க, அதன்பிறகு ஹீரோயின் சான்ஸ் தருவதைப் பற்றி யோசிக்கலாம் என்றாராம். அப்போது அவரிடம் தலையசைத்துவிட்டு இதுவரை டயட்ஸ் கடைபிடித்து வரும் அந்த நடிகை நெருக்கமானவர்களிடம் அந்த இயக்குநரை வாய்க்கு வந்தப்படி திட்டி வருகிறாராம்.

No comments:

Post a Comment