லவ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இந்த நடிகை. பின்னர் மார்க்கெட் சரிந்ததால் சாண்டல் நடிகருக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்பவும் எந்த தமிழ் இயக்குநரும் அவரை நெருங்காததால் தனது தாய்மொழியான மளையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது அங்கும் நினைத்தப்படி அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மாயமான குடும்பப்படுத்தில் நடித்த நடிகருக்கு ஜோடியாக வெறித்தனமாக எடுத்த ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்க அந்த நடிகைக்கு பேசினப்படி சம்பளம் கொடுக்கலையாம். அதனாலதான் அவர் படத்தின் புரமோசனுக்கு வரவில்லையாம்.
"எல்லோரும் நடிக்க தயங்கின ஹீரோவோட நான் நடிச்சேன், குறைந்த சம்பளத்துலதான் நடிச்சேன். அதைக்கூட சரியாக தரவில்லை. நான் தான் ஹீரோயின்னு ஆரம்பத்துல சொல்லிட்டு அதன் பிறகு இன்னொரு புதுமுக ஹீரோயினை கொண்டு வந்து படத்துல முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சாங்க.
எனக்கு மார்க்கெட் இல்லைதான் அதுக்காக மான, ரோஷம் இல்லாமலா போயிடுமா?" என்று நெருக்கமானவங்ககிட்ட புலம்புறாராம் நடிகை.
No comments:
Post a Comment