கடந்த வெள்ளிக்கிழமை ஜெயம் ரவி நடிப்பில் ’ரோமியோ ஜுலியட்’ படமும், சந்தானம் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள ’இனிமே இப்படித்தான்’ படமும் ரிலீஸாகின. இப்படங்களுடன் ஜூராஸிக் பார்க்கின் நான்காவது பாகமான ஜூராஸிக் வேர்ல்ட் என்ற ஹாலிவுட் படமும் வெளிவந்தது.
இதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக தமிழ் படங்களின் வசூலைவிட ஆங்கில படமான ஜூராஸிக் வேர்ல்ட் படம் அதிகமான வசூலை குவித்துள்ளது. இதை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள ‘ரோமியோ ஜுலியட்’ படம் நல்ல வசூலை குவித்துள்ளது.
கடந்த வாரம் வெளிவந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மட்டும் தற்போது வெளிவந்துள்ளது. இதில் ஆங்கில படமான ஜூராஸிக் வேர்ல்ட் படம் ரூ 93 லட்சம் வசூல் செய்து எல்லோருக்கு ஆச்சரியம் அளித்துள்ளது. அடுத்து ரோமியோ ஜூலியட் படம் 3 நாள்களில் ரூ 72 லட்சம் வசூல் செய்துள்ளது.
சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படம் ரூ 45 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. மாசு என்கிற மாசிலாமணி 3 வாரத்தில் 4 கோடிக்கு மேலும் காக்கா முட்டை படம் 2 வாரத்தில் 1.15 கோடியும் வசூல் செய்துள்ளது.
Tags:box officechennai box officeInimey Ippadithanromeo julietஇனிமே இப்படித்தான்சென்னை பாக்ஸ் ஆபிஸ்பாக்ஸ் ஆபிஸ்ரோமியோ ஜூலியட்
No comments:
Post a Comment