Monday, 8 June 2015

’சரக்கு’ அடிக்கும் போது கட்டாயம் தவிர்க்க வேண்டிய சைட் டிஷ்கள்!!

சனி கிழமை வந்தாலே போதும், சாதரணமாகவே கூட்டமாக இருக்கும் டாஸ்மாக்குள் சனி கிழமைகளில் அலைமோதும். பாட்டிலிலேயே ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று பெரிய பெரிய எழுத்துக்களில் போட்டிருந்தாலும் கூட, அதை பெரிய விஷயமாக நமது ’குடி’மக்கள் எடுத்துக் கொள்வதே இல்லை.
இருந்தாலும் மதுவை அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உடலுக்கு தீங்கு ஏற்படுமே தவிர, அவ்வப்போது அளவாக அடித்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. தற்போது பலருக்கு உடல்நலத்தின் மீது அக்கறை அதிகம் இருப்பதால், மதுவை பருகினாலும் அதனால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்து, அதற்கு ஏற்ப நடக்கின்றனர்.
எப்போதும், சரக்கடிக்கும் போது நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அப்படி சாப்பிடும் போது எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சில உணவுகள் உங்கள் உடல் நிலையை இன்னும் மோசமாக மாற்றிவிடும்.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் மது அருந்துகையில் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகளைக் காணலாம்...
எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள்!!
ஆல்கஹால் பலருக்கு அசிடிட்சியை ஏற்படுத்தும். உங்களுக்கு சரக்கு அடித்த பின் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், சரக்கு அடித்த பின் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
’சீஸ்’ ஆகவே ஆகாது!!
சிலருக்கு சரக்கு அடிக்கும் போது சீஸ் நிறைந்த உணவுகளான பீட்சா, பாஸ்தா போன்றவற்றை சாப்பிடும் பழக்கம் இருக்கும். இவை மிகவும் மோசமான மற்றம் எளிதில் செரிமானமாகாத உணவுப் பொருட்களில் ஒன்று. ஆகவே இவற்றை தவிர்க்க வேண்டும்.
கொழுப்பு நிறைந்தவை!!
பார்களில் சரக்கிற்கு சைட் டிஷாக வேர்க்கடலை மற்றும் வறுத்த முந்திரியைக் கொடுப்பார்கள். இவற்றை சரக்கு அடிக்கும் போது உட்கொள்ளவே கூடாது. ஏனெனில் இவற்றில் கொழுப்பு அதிகம் இருப்பதுடன், அவை வயிற்றை நிறைத்து, மது அருந்திய பின் சாப்பிட முடியாத நிலையை உண்டாக்கிவிடும்.
சிப்ஸ் வேலைக்கே ஆகாது!!
பொதுவாகவே சிப்ஸ் உடலுக்கு கேடுதான். அதிலும் மது அருந்தும் போது உட்கொண்டால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும். குறிப்பாக உடல் வறட்சியை ஏற்படுத்தும். முக்கியமாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
சாக்லேட்டுகளை திரும்பிக் கூட பாக்கதீங்க!!
சரக்கு அடிக்கும் போது, இனிப்புக்களை எடுத்து வந்தால், அவை போதையை அதிகரிப்பதுடன், மேலும் மது அருந்த வேண்டுமென்று தூண்டும். இதனால் அளவுக்கு அதிகமாக மது அருந்தி, மறுநாள் கடுமையான தலைவலிதான்.
கூல்டிங்ஸ், சோடா… நோ நோ நோ!!
சரக்கு அடிக்கும் போது, அத்துடன் சோடாவையோ அல்லது குளிர்பானங்களையோ மிக்ஸ் செய்து குடிக்காதீர்கள். ஏனெனில் ஏற்கனவே ஆல்கஹால் உடல் வறட்சியை ஏற்படுத்தும். அத்துடன் சோடாவை மிக்ஸ் செய்தால், அது இன்னும் உடல் வறட்சி ஏற்படுவதை அதிகரிக்கும். எனவே சரக்கு அடிக்கும் போது, அத்துடன் பழச்சாறுகள் அல்லது ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சால்ட்டி பிஸ்கெட்டுகள்!!
இவற்றை எடுத்துக் கொள்வாதாலும், உங்களுக்கு தாகம் அதிமாக எடுக்கும். இதனால் நீங்கள் மேலும், மேலும் குடிக்க தூண்டப்படலாம்.
காரமான தீனிகள்..
அதிக காரமான உணவுகள் சாதாரணமாகவே வயிற்றுக்கு ஆகாது. சரக்கடிக்கும் போது சாப்பிட்டால் அவ்வளவுதான். குடல் சீக்கிரமே காலி!!!
மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை தவிர்த்தாலே உடல் கெடுவதை கொஞ்சம் தள்ளிப் போடலாம்.

No comments:

Post a Comment