Sunday, 7 June 2015

தமிழ் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டார் யார்? கூறிய சந்தானம்!!

நடிகர் சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் முடிவில் இருக்கிறார் போல தெரிகிறது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தினைத் தொடர்ந்து தற்போது ’இனிமே இப்படித்தான்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக, ஆஸ்னா சவேதி மற்றும் அகிலா கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் விளம்பரத்திற்காக மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சந்தானம்.
அப்போது அவர், ’இந்த படத்தை தயாரிக்கும் போது தான் ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்று எனக்கு தெரியவந்தது. ஆனாலும் தொடர்ந்து புதிய படங்களை தயாரிப்பேன். படம் எடுப்பதை விட அதை வெளியிடுவது தான் சிரமம்.
எனது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக ஆஸ்னா சவேரி நடிப்பதற்கு காரணம், அவர் முதல் படத்தில் திறமையாக நடித்ததுதான்.
தற்போது தமிழ் சினிமாவில் பேய்க் கதைகளை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் அதிக அளவில் வெற்றி பெறுகின்றன. அப்படி பார்த்தால் பேய் தான் இப்போது சூப்பர்ஸ்டார்.’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment