Monday, 15 June 2015

எப்போதும் எனக்கு வேண்டும்!! ஐஸ்வர்யா ராஜேஷ்!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு எப்போதும் மீடியே நண்பர்களின் ஆதரவு வேண்டும் என்று மீடியாக்களிடம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இவர் நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களுக்கு இவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ’பத்திரிக்கை, ஊடகம், இணையதளம் மற்றும் பண்பலை வானொலி நண்பர்களுக்கு வணக்கம்.
நடிகர் தனுஷ் அவர்களும் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களும் இணைந்து தயாரித்து திரு. மணிகண்டன் அவர்கள் இயக்கத்தில் வெளியான “காக்கா முட்டை” படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவும், விமர்சனமும் எனக்குள்ளே பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும்
ஏற்படுத்தியது. அதே போன்று இந்த படம் பெருமளவு ரசிகர்களை சென்றடைந்ததற்கும் நீங்களே முக்கிய காரணம்.
வருங்காலங்களில் நான் நடித்து வெளியாக இருக்கின்ற மற்ற படங்களுக்கும் இதே போன்றதொரு பேராதரவை அளிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment