விஜய் பெரும்பாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாகவே இருப்பார். தேவையில்லாமல் மற்றவர்களிடம் அதிகம் பேச்சு கொடுக்க மாட்டார். மற்ற நடிகர்களில் இருந்து மிகவும் வேறுபட்டவர் என்றே கூறவேண்டும்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளுமே அன்றைய தினம் தான் நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக முன்பே தன்னை தயார் செய்து கொண்டுதான் ஸ்பாட்டுக்குள்ளேயே என்ட்ரி ஆகிறாராம் விஜய். அதனால், தினமும் தனது வீட்டில் இருந்து வரும்போது மேக்கப் காஸ்டியூம் அணிந்து தயார் நிலையில் ஸ்பாட்டுக்கு வருபவர், காரில் ஸ்பாட்டுக்கு வரும்போது இறங்கி நடந்தெல்லாம் செல்வதில்லையாம். நேராக கேரவன் நிற்கும் இடத்துக்கு சென்று அந்த வாசலில்தான் காரை விட்டு இறங்குவாராம்.
மேலும், அப்போது அக்கம் பக்கம் திரும்பிகூட பார்க்க மாட்டாராம். நேராக கேரவனுக்குள் சென்று விடுவாராம். அடுத்து இயக்குனர் அழைக்கும் வரை வரை உள்ளே இருக்கும் விஜய், அவர் அழைக்கிறபோது நடிக்க வேண்டிய அதே மூடுடன் கேமரா முன்பு வந்து நடிப்பாராம்.
முக்கியமாக அந்தந்த கேரக்டரில் தன்மை முழுமையாக வெளிப்பட வேண்டும் என்று நினைக்கும் விஜய், அதன்காரணமாகவே மற்றவர்களிடம் அதிகமாக பேசுவதைகூட தவிர்க்கிறாராம்.
No comments:
Post a Comment