Monday, 15 June 2015

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை இல்லை!!

தேர்தலின் போது வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் வெளியிடும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களின் போது பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை அரசியல் கட்சிகள் வெளியிடுகின்றன. ஆனால் அந்த கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே போய் விடுகின்றன.
எனவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட இந்த கடிதத்துக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்து உள்ளது.
அதில் தேர்தல் ஆணையம் கூறும்போது, ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு எந்த அரசியல் சட்ட அதிகாரமும் இல்லை. எனவே அந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று தெரிவித்து உள்ளது.
எனினும் இந்த விவகாரத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் அறிக்கை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment