அமெரிக்காவில் இனவெறி காரணமாக 9 பேரை சுட்டுக்கொன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் இருக்கும் சார்ல்ஸ்டன் நகரில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆப்பிரிக்க – அமெரிக்கத் தேவாலயத்தில் வெள்ளை இன வாலிபர் ஒருவர் 9 கறுப்பினத்தவரை சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்தப் படுகொலைச் சம்பவம் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலையில் நிகழ்ந்தது. அப்போது மணி இரவு 9 இருக்கும். தேவாலயத்தில் எட்டு பேர் இறந்து கிடந்ததாக தலைமை போலீஸ் அதிகாரி முல்லன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றபோது ஒன்பதாவது நபர் மரணமடைந்தார்.
மேலும் ஒருவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருவதாக அவர் கூறினார். இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான நபரை கைது செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், கறுப்பினத்தவர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக இப்படி செய்ததாக அவ்வாலிபர் தெரிவித்துள்ளார்.
இந்தச் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அந்த தேவாலத்துக்கு அருகே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் திரண்ட மக்களிடம் கலைந்துசெல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரி விக்கப்பட்டது.
Related posts
No comments:
Post a Comment