கத்தி படத்திற்கு பிறகு இளைய தளபதி விஜய் நடித்துள்ள படம் ’புலி’. சிம்புதேவன் இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது கிராபிக்ஸ் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படபிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் வேலாயுதம் படத்திற்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்தது குறித்தும், அவருடைய இளமை ரகசியத்தை குறித்தும் சில தகவல்களை கூறியிருக்கிறார் ஹன்சிகா…
இதுகுறித்து அவர் கூறியதாவது,“வேலாயுதம் படத்திற்கு பிறகு ஐந்து வருடம் கழித்து புலி படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறேன், இந்த ஐந்து வருடத்தில் விஜய் அவர்களின் பழக்கத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் அவரது மார்க்கெட் உலகளவில் உயர்ந்துள்ளது. சொல்லபோனால் அவரின் இளமையும் கூடிக் கொண்டே செல்கிறது.
‘வேலாயுதம்’ படத்தை விட ‘புலி’ படத்தில் அவரின் வேகம் இன்னும் கூடியுள்ளது. ரொம்ப இளமையாக தெரிகிறார். அவரின் தொழில் பக்தி, திரைத்துறை தொழிலாளர்களிடம் நடந்து கொள்ளும் பண்பு, ரசிகர்களை அரவணைத்து செல்வது, படப்பிடிப்பு சமயங்களில் எவர் ஒருவரை கண்டாலும் வணக்கம் சொல்வது என ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை அசத்துவார்.
அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே மகிழ்ச்சிதானே. அதுதான் அவரின் இளமை ரகசியமா? என்று தெரிந்து கொள்ள ஆசை” என்கிறார் ஹன்சிகா.
No comments:
Post a Comment