இயக்குனர் ஹரி – சூர்யா கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணியாகவே இருந்து வருகிறது. இவர்களின் சிங்கம் மற்றும் சிங்கம் 2 படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
இதனைத் தொடர்ந்து இதன் 3ஆம் பாகத்திற்கான கதையையும் தயார் செய்து விட்டார் ஹரி. சூர்யா வெங்கட் பிரபுவின் மாஸ் படத்தை முடித்து விட்டு, ‘24’ மற்றும் ‘ஹைக்கூ’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சூர்யா சிங்கம் 3 படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
ஆறு, வேல், சிங்கம் மற்றும் சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து சூர்யா மற்றும் ஹரி கூட்டணி இணையும் 5 வது படம் இது. முதல் இரண்டு பாகங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா, இந்த பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறாராம்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இது அவருக்கு சூர்யாவுடன் இரண்டாவது படம் ஆகும். இப்படம் விரைவில் படப்பிடிப்புக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment