உத்தம வில்லன் படத்தை தொடர்ந்து கமல் நடித்து வரும் படம் 'தூங்கா வனம்’. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்குகிறார்.
இதனிடையே நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அமர் ஹைய்ன் என்ற பாலிவுட் படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார் கமல். சில ஆண்டுகளுக்கு முன்னர், "தலைவன் இருக்கிறான்" என்ற பெயரில் துவங்கிய படமே, இந்த அமர் ஹைய்ன் என்று பரவலாக தகவல் பரவியது.
அண்டர்வேல்ட் டான் மற்றும் அரசியல் உள்ளிட்டவைகளை கதைக்களமாக உள்ள இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சயீப் அலி கான் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாது, கமல் வில்லனாக நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்படத்தை தழுவி, இப்படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தூங்காவனம் பட பணிகளில் பிஸியாக உள்ள கமல், விரைவில் அமர் ஹைய்ன் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment