ராஜமெளலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் பாகுபலி. இப்படத்தில் ‘பிரபாஸ்’, ’அனுஷ்கா’, ’ராணா’, ’தமன்னா’, ’சுதீப்’, ’சத்யராஜ்’ உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுக்காகச் இயக்குநர் ராஜமௌலி, பிரபாஸ், ராணா, நாயகிகள் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உட்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை வந்திருந்தனர். சூர்யா தலைமையில் டிரைலர் வெளியிடப்பட்டது.
பின்பு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜமௌலியிடம் இந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றிது? எப்போது தோன்றியது? என்றி கேட்கப்பட்டது. அதற்கு, நான் அந்த உலகத்துக்குள்தான் (மன்னர்காலம்) வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் ஒன்றாம்வகுப்புப் படிக்கும்போதே அம்புலிமாமா கதையைப் படிக்கத் தொடங்கினேன். அப்போதே அந்த உலகம் என்னை ஈர்த்துவிட்டது. நான் இயக்குநரானதும் முதல்படமாகவே இப்படி வரலாற்றுப்படத்தைச் செய்ய ஆசைதான். முதல்படத்தில் இப்படி ஒரு கதையைச் சொன்னால் தயாரிப்பாளர்கள் விரட்டிவிட்டுவிடுவார்கள் என்பதால் காத்திருந்து இப்போது படத்தை எடுத்திருக்கிறேன் என்றார்.
இந்தக் கதையை நான் முதலில் பிரபாஸிடம் சொன்னபோது, அவர் சில கண்ணீர்விட்டார். பல இடங்களில் அவருடைய முடிகள் சிலிர்த்தன, ஒரு படைப்பாளிக்கு இதுவே பெரிய பெருமை. அதனால் உடனே படத்தைத் தொடங்கினோம். ஒருகதையில் வில்லன் மிகவும் பலமானவனாக இருந்தால்தான், நாயகன் அவனை வெற்றிகொள்ளும்போது சிறப்பாக இருக்கும்.
அப்படி ஒரு சக்திமிக்க வில்லன் வேடத்துக்கு ராணாவைத் தவிர எனக்கு வேறு யாரும் தோன்றவில்லை, அவரோ ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் சார் நாசர் சார் ஆகியோரும் எனனக்குப் பொருத்தமாக அமைந்தார்கள். படம் எடுத்ததை இப்போது நினைத்துப்பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆனால் எடுத்து முடித்துவிட்டோம். படம் திருப்தியாக வந்திருக்கிறது என்று சொன்னார்.
No comments:
Post a Comment