கௌதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தினைத் தொடர்ந்து ‘தல’ அஜித், வீரம் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித் தனது முகத்தை மூடியபடி பைக்கிலேயே ஷூட்டிங் சென்றுள்ளார். யாரோ என்று கருதிய போலீஸார் அஜித்தை உள்ளே அனுமதிக்கவில்லையாம். பின்னர் அது அஜித் தான் என்று தெரிந்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனராம். அவர்களிடம் இருந்து அஜித்தை உள்ளே அனுப்பி வைப்பதற்குள் போலீஸாருக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டதாம்.
இப்படத்தில், ஸ்ருதிஹாசன் அஜித் ஜோடியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை லட்சுமிமேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். படத்தினை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts

No comments:
Post a Comment