Saturday, 20 June 2015

கிம் கர்தாஷியனுடன் ஆபாச படத்தில் தனுஷ் நடிக்கிறாரா..?

அமெரிக்க டி.வி. ரியேலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர்  கிம் கர்தாஷியன் (Kim Kardashian). அவ்வப்போது நிர்வாண, அரை நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை  உசுப்பேற்றிக்கொண்டே இருப்பார். இதன் மூலமே இவர் உலக புகழ் பெற்றார் என்றுகூட சொல்லலாம்.
அண்மையில் இவர் இந்தியாவில் தயாராகும் ஆபாச படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இப்படத்தை  பைசல் சயிப் என்பவர் இயக்க இருக்கிறாராம். இவர் யார் என்றால் ஏற்கனவே ‘மைன் ஹூன் ரஜினிகாந்த்’ படத்தை இயக்கி ரஜினியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டவர் தான்.
தற்போது இவர் வயது வந்தோருக்கு மட்டும் (For Adults Only) என்ற ஆபாச படத்தை இயக்கவிருக்கிறாராம். இப்படத்தில் நடிக்க ஆபாச நடிகை கிம் கர்தாஷியனை அவர் அணுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தில் ஆபாச படத்துக்கு நிகராக கிளாமர் காட்சிகளை வைத்திருக்கிறார் பைசல்.
இது குறித்து அவர் கூறுகையில்,‘பாலிவுட் நடிகைகள் யாரும் நான் எதிர்பார்க்கும் அளவுக்கு கவர்ச்சி காட்ட மறுத்ததால் கிம் கர்தாஷியனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறேன். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார்.
குழந்தை பெற்றபிறகு கால்ஷீட் தந்தால்போதும். அதுவரை காத்திருக்க தயார் என அவரிடம் தெரிவித்தேன். அவரும் அதுபற்றி பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்.  இப்படத்தில் நடிக்க தமிழ் பட ஹீரோ ஒருவரையும் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்தான் கிம்மின் காதலராக நடிக்க உள்ளார்’ என்று கூறினார்.
இந்நிலையில் தற்போது அந்த தமிழ் நடிகர் யார் என்ற ஒரு தகவல் இணையத்தளங்களில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அவர் வேற யாரும் இல்லை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தான். இந்த செய்தி உண்மையா என்று தெரியவில்லை.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தளங்களில் இந்த செய்தி உலா வந்துக்கொண்டிருக்கிறது. எங்களுடைய கருத்துபடி இந்தப் படத்தில் தனுஷ் நடிக்க 100% வாய்ப்பு இல்லை என்பதுதான்.

No comments:

Post a Comment