’என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா’ என்று சமீபத்தில் இளைஞர்களுக்கிடையே ஒரு புதிய ட்ரெண்டே உருவானது.
இந்த ட்ரெண்ட் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் தான். அது ஏன் என்று ரசிகர்களுக்கே தெரியும்.
’ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சியான இந்நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..." என்று அடிக்கடி கூறுவது வழக்கம். அதோபோல் ”சும்மா இரு போலீச கூப்பிடுவேன்..." என்ற வசனமும் ரொம்ப பாப்புலர்..
லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிய இந்த இரண்டு வசனங்கள் தான் பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின. இந்த வசனத்தை கேட்கவே பல ரசிகர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சிடை டியூன் செய்வார்கள். ஆனால் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டு நடிகை சுதா சந்திரன் நடத்துகிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென்று நீக்கப்பட்டது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணமே "போலீச கூப்பிடுவேன்..." என்கிற வசனம்தான் என்கிறார்கள்.
"நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் போலீசுக்கு போனால் பிரச்சினை பெரிதாகும் என்றுதான் இங்கு வருகிறார்கள். இங்கும் அவர்களை போலீசை கூப்பிடுவேன் என்று மிரட்டினால் எப்படி அவர்கள் வருவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல லட்சுமி ராமகிருஷ்ணன் அதட்டலும், மிரட்டலும் அதிகமானது. நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எங்களிடம் வருத்தப்பட்டு சொல்ல ஆரம்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பொறுமையும், சமயோசிதமாக சமாளித்தலும் முக்கியம். ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ச்சியின் நோக்கத்தையை கெடுத்து விடுகிறார். அதனால்தான் வேறு வழியில்லாமல் அவர் மாற்றப்பட்டார்" என்கிறது சேனல் வட்டாரம்.
ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் தரப்பு இதனை மறுக்கிறது. "திரைப்பட இயக்கத்தில் தீவிர கவனம் செலுத்துவதால் நிகழ்ச்சியை விட்டு அவரே விலகிவிட்டார்" என்கிறார்கள். என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா....
No comments:
Post a Comment