சமீபகாலமாகவே கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி எதுவென்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலை பற்றி தான். சில வாரங்களுக்கு முன்பு நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேரளாவில் உள்ள சர்ச் ஒன்றில் ரகசியமாக திருமணம் நடந்ததாக செய்திகள் பரவியது.
மேலும் இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்களும், சில முக்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அப்போது இந்த திருமண செய்தியை மறுத்தனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் .
இந்நிலையில் தான் நயன்தாராவிற்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்குமான காதல் நாளுக்கு நாள் நெருக்கமாகி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சினிமாவில் நடிக்க வந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை சென்னையில் சொந்தமாக வீடு எதையும் வாங்காத நயன்தாரா தற்போது சென்னை, கோயம்பேட்டில் ஒரு மிகவும் நவீனமான வசதியான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியிருக்கிறார் என்கிறார்கள்.
அவருடைய சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருவல்லாவிலும், கொச்சியிலும் வீடுகளை வைத்துள்ள நயன்தாரா திடீரென சென்னையில் வீடு வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். பொதுவாக நடிகைகள் இயக்குநர்களுடன் ஓரளவிற்கு நட்பாக மட்டுமே பழகுவார்கள். ஆனால் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கமாக பழகுகின்றாராம்.
இத்தனைக்கும் விக்னேஷ் சிவன் இதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருக்கிறார். இரண்டாவது படமாக அவர் இயக்கி வரும் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க வந்த பிறகுதான் அவர்களிருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது என்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து சில புகைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நெருக்கமாக அருகருகே இருந்தது தெரியவந்தது. இப்போது புதிதாக வேறு ஒரு புதிய செல்ஃபி புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இது ஒருப்புறம் இருக்க தற்போதைய தகவலின்படி, விரைவில் நடைப்பெறவிருக்கும் நானும் ரெளடித்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நயன்தாராவின் திருமணம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்போ கூடிய விரைவில் நயன்தாராவின் திருமணம் அம்பலமாகும் என்பது உண்மை…
No comments:
Post a Comment