டார்லிங் படத்திற்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் ’த்ரிஷா இல்லனா நயன்தாரா’.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ் நடிக்க, முக்கிய வேடத்தில் சிம்ரன் நடித்துள்ளார். அதோடு நடிகை ப்ரியா ஆனந்த இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தின் டீஸர் இளம் தலைமுறையினரிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின்பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் லேட்டஸ்ட்டாக இப்படத்தில் நடிகர் ஆர்யாவும் இணைந்திருக்கிறார்.
சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ஆர்யா, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று வேடிக்கை பார்த்திருக்கிறார். அப்போது ‘பிட் படம் டி...’ பாடலுக்காக ஜி.வி.பிரகாஷ் ஆடிய ஆட்டத்தை பார்த்து வியந்துவிட்டாராம் ஆர்யா.
இதுகுறித்து தனது டுவீட்டில், ‘‘த்ரிஷா இல்லனா நயன்தாராவில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது செம அனுபவம். ‘பிட் படம் டி...’ பாடலுக்கு ஜி.வி. மாமாவின் டான்ஸ் செம செம... பிச்சு பெடல் எடுத்துட்டான்!’’ என்று கூறியுள்ளார்.
இன்னொரு டுவீட்டில், ‘‘த்ரிஷா இல்லனா நயன்தாரா செட்டில் ஆனந்தியுடன் ஜி.வி. கடலை போட்டதை கண்டுபிடிச்சுட்டேன். என்னையே மிஞ்சிட்டாரே!’’ என்று ஜி.வி.யை கலாய்த்திருக்கிறார் ஆர்யா.
No comments:
Post a Comment