Monday, 15 June 2015

பாலாவால் மரண பயத்தில் தவித்த சசிகுமார்…!

‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா இயக்கிவரும் படம் ‘தாரை தப்பட்டை’. கரகாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் சசிகுமார் ஹீரோவாகவும், வரலட்சுமி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.நாதஸ்வர கலைஞராக நடிக்கும் சசிகுமாருக்கு இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். வரலட்சுமி கரகாட்ட நடனக்கலைஞராக நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படம் ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.
இயக்குநர் பாலாவுக்கும் நடிகர் சசிகுமாருக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், இதனால் படப்பிடிப்பு நிறுத்தப் பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. அதனை தொடர்ந்து சண்டை காட்சியின் போது சசிகுமாருக்கு இடது கை எலும்பு முறிந்தது சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் சிறிதுகாலம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்ததுள்ள சசிகுமாருக்கு மரண பயத்தை காட்டியுள்ளார் பாலா. சமீபத்தில் இப்படத்தின் ஒரு சண்டைக்காட்சியில் நிஜ கத்தியை கையில் கொடுத்து சண்டை போட சொன்னாராம் பாலா.
அதற்கு சசிகுமார் போலி கத்தியை வைத்து நடிக்கலாமே என்று சொன்னதற்கு, நிஜ கத்திதான் காட்சிக்கு தத்ரூபமாக இருக்கும் என்று சொன்னாராம் பாலா. உடனே என்ன செய்வதென்று இந்த காட்சி எடுத்து முடிக்கும் வரை மரண பயத்துடனே நடித்தாராம் சசிகுமார்.

No comments:

Post a Comment