தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்து உள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வந்தன.இந்த நிலையில் கர்நாடாக மாநில மந்திரி சபை முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது. இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக ஐகோர்ட்டில் ஆஜரான ஆச்சாரியாவையும், அவரின் உதவிக்காக வழக்கறிஞர் சந்தேஷ்சவுட்டாவையும் சுப்ரீம்கோர்ட்டிலும் தொடரச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தொடரும் வழக்கு என்பதால், இந்த அரசாணை அவசியமாகும்.
தற்போது அந்த மேல் முறையீட்டு மனு, டெல்லி கொண்டு செல்லப்பட்டு சட்ட நிபுணர்களால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வரும் திங்கட்கிழமை (22 ஆம் தேதி) கர்நாடகா அரசு தரப்பில் அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Related posts
No comments:
Post a Comment