Friday, 12 June 2015

பாதியில் நின்ற படம்… தயாரிப்பாளராக களம் இறங்கினார் தோனி..?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பாலிவுட்டில் ஒரு படம் தயாராகி வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம்.
இந்த படத்தை தி வெட்னஸ்டே, ஸ்பெஷல் 26 போன்ற படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே என்பவர் இயக்கி வருகிறார்.இதில் தோனி கேரக்டரில் சுஷாந்த் சிங் என்பவர் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளீயான பிகே படத்தில் அனுஷ்கா சர்மாவின் காதலனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்திற்கு நிறைய பிரச்னைகள் எழுந்துள்ளதாம். குறிப்பாக இப்படத்தை தயாரித்தவர்கள் இப்படத்திலிருந்து பாதியில் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படத்திற்கு நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளதை அறிந்த தோனி, தானே முன்வந்து இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சுமார் ரூ.30 கோடி இப்படத்திற்காக தோனி முதலீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஜூனில் தோனி படம் ரிலீஸாக வேண்டியது, ஆனால் சில பல பிரச்னைகளால் படத்தின் ஷூட்டிங் முடியாததால் ரிலீஸ் தேதி மேலும் சில மாதம் தள்ளி போகிறது.

No comments:

Post a Comment