ரிலீஸுக்கு முன்பே பல விருதுகளை அள்ளிய படம் ’காக்கா முட்டை’.மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ், விக்னேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். அதேபேல் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது இப்படம்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் வசூலாக, ரூ.90 லட்சங்களை வசூலித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் இப்படத்தில் அந்தளவிற்கு எந்த ஒரு பிரபலாமான நடிகர்களும் நடிக்க வில்லை என்பது தான்.
தற்போது படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் ரூ 3.35 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இன்று காலை பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர், படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
No comments:
Post a Comment