Friday, 19 June 2015

காதல் முதல் நிர்வாண வீடியோ வரை.. துறத்தும் மீடியா.. தெறிக்கும் நயன்தாரா, ஹன்சிகா

ஜெயம் ரவி ஹன்சிகா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ’ரோமியோ ஜூலியட்’.காதலை மையமாகக்கொண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் கலந்து கொள்ள அப்படத்தின் நாயகி ஹன்சிகாவை தயாரிப்பாளர் நந்தகோபால் அழைத்தபோது, நான் பிரஸ்மீட்டுக்கு வந்தால் சிம்பு உடனான லவ் பிரேக்கப், நிர்வாண வீடியோ பற்றி எல்லாம் கேட்டு என்னை கஷ்டப்பட வைப்பார்கள். அதனால் நான் வர மாட்டேன் என்று மறுத்திருக்கிறார்.
இந்தக் கேள்விகளை கேட்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தயாரிப்பாளர் உறுதிமொழி கொடுத்த பிறகே ரோமியோ ஜூலியட் பிரஸ்மீட்டுக்கு வந்திருகிறார் ஹன்சிகா. அவர் வந்த உடன், ரோமியோ ஜூலியட் படத்தைப் பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள் என்று முன் அறிவிப்பு செய்தனர்.
இந்நிலையில் தற்போது ஹன்சிகா போலவே  மீடியாவை தவிர்க்கிறாராம் நயன்தாரா.  தன் மானேஜர் பெயரில் திருநாள் என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார் ஜீவா. இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
திருநாள் படப்பிடிப்பில் நயன்தாரா இருக்கும்போது சென்னையிலிருந்து செய்தியாளர்களை அழைத்துச் செல்ல தீர்மானித்திருந்தார் படத்தின் நாயகனான ஜீவா. இந்த ஏற்பாட்டுக்கு முதலில் நயன்தாராவும் ஓகே சொல்லி இருந்தார்.
கடந்த சில நாட்களாக அவரது புதிய காதல் பற்றி மீடியாக்களில் செய்தி வர ஆரம்பித்ததும் உஷாராகிவிட்டாராம் நயன்தாரா. மீடியாவை இங்கு அழைத்து வந்தால் படத்தைப்பற்றி கேட்காமல் என்னுடைய பர்சனல் மேட்டர் பற்றி கேட்பார்கள். அதனால் நான் இருக்கும்போது மீடியாவை கூப்பிட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

No comments:

Post a Comment