ஐஃபோன் கொடுக்காத காரணத்தால் 23 வயதான ஹைதராபாத் மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் சாய் கிரண். இவர் கேசராவிலுள்ள கிதாஞ்சலி கல்லூரியில் பொறியியல் படித்து பட்டம் பெற்றார். பின்னர் சமீபத்தில்தான் ஃப்ளோரிடா மாகாணத்தில் எம்.எஸ் கல்வியில் சேர்ந்துள்ளார். அவருடைய மொபைலைக் கேட்டு மிரட்டிய சிலர், அவர் கொடுக்காத காரணத்தினால் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தன்னுடைய வீட்டில் இருந்த சாய் மதியம் 12.15 மணியளவில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நான்கு முறை தொடர்ச்சியாக சுடப்பட்டத்தில் சாய் பரிதாபமாக இறந்துள்ளார்.
“இந்த சம்பவம் குறித்த தகவல்கள் பெற்று வருகின்றோம். சில பேர் அவரிடம் செல்போனைக் கேட்டு மிரட்டியதாகவும், அவர் கொடுக்காத காரணத்தினால் சுட்டுக் கொன்றதாகவும் போனில் பேசிக் கொண்டிருந்த நண்பர் தெரிவித்துள்ளார். அவருடைய உடலை இந்தியா கொண்டுவர உதவுமாறு தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.” என்று அவரது சாய் கிரணின் உறவினர் குமார் கூறினார்.
ஐபோன் ஒன்றிற்காக மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related posts
No comments:
Post a Comment