’காக்கி சட்டை’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ளப்படம் ‘ரஜினி முருகன்’. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, சமுத்திரகனி, ராஜ்கிரண் ஆகியோரும் நடித்துள்ளார்.
லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தையும் தன்னுடைய முதல் படத்தைப்போலவே கலகலப்பான காமெடி கதையில் இயக்கியிருக்கிறார் பொன்ராம். அதோடு, முந்தைய படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரியை நடிக்க வைத்தது போல் இந்த படத்திலும் அவர்களின் கூட்டணியை தொடர்ந்திருக்கும் பொன்ராம், பல காட்சிகளை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் சாயலில் வைத்திருக்கிறாராம்.
இது சிவகார்த்திகேயனுக்கு தெரிந்தும், காமெடி படம்தானே. இதையெல்லாம் ரசிகர்கள் கவனித்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று விட்டு விட்டாராம். குறிப்பாக, காமெடியே படத்தில் தூக்கலாக இருப்பதால் சூரிக்கும் அதிக இடம் கொடுத்திருக்கிறாராம். மேலும், முந்தைய படத்தில் சிவகார்த்திகேயனை மட்டுமே பின்னணி பாட வைத்தவர், இந்த ரஜினி முருகனில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பாடலில் அவர்கள் இருவரையும் பாட வைத்து நடிக்க வைத்திருக்கிறார்.
ஆக, இந்த படத்தில் சூரிக்கு டூயட் பாடத்தான் ஹீரோயினி கிடையாதே தவிர, மற்றபடி சிவகார்த்திகேயனுக்கு இணையான காட்சிகள், டயலாக்குகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts
No comments:
Post a Comment