Tuesday, 9 June 2015

தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு தோனி வேண்டுக்கோள்..!

ரிலீஸுக்கு முன்பே பல்வேறு விருதுகளை அள்ளி ரசிகர்களின் கவனத்துக்குரிய படமாக வெளிவந்தப் படம் ’காக்கா முட்டை’.
மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ், விக்னேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். அதேபேல் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது இப்படம். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் வசூலாக, ரூ.90 லட்சங்களை வசூலித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தற்போது படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் ரூ 3.35 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் காக்கா முட்டை படத்தில் எதார்த்தமான நடைப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் எல்லோரையும் தன் வசப்படுத்திய விக்னேஷ், ரமேஷ் இரண்டு சிறுவர்களையும் சந்தித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி.
இரண்டு சிறுவர்களும் தோனியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தோனி இயக்குநர் மணிகண்டனிடம் ‘தமிழ் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், தமிழில் வெளிவரும் அனைத்து படங்களையும் சப்-டைட்டிலுடன் ரிலிஸ் செய்தால் நானும் பார்ப்பேன், அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்’ என கோரிக்கை வைத்துள்ளார்.
தோனியின் கோரிக்கையை ஏற்று தமிழ் சினிமா இயக்குநர்கள் தங்கள் படங்களை சப்-டைட்டிலுடன் ரிலீஸ் செய்வார்களா..? என்று பொருத்திருந்து பார்ப்போம்..

No comments:

Post a Comment