Thursday, 11 June 2015

இந்தி-தமிழில் தயாராகும் ஆபாச படத்தில் நடிக்கும் கிம் கர்தாஷியன்..!

கிம் கர்தாஷியன் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அமெரிக்க டி.வி. ரியேலிட்டி ஷோ பிரபலமான இவர், நிர்வாண, அரை நிர்வாண போஸ் கொடுத்தே உலகப் புகழ் பெற்றவர்.


அண்மையில் இவர் இந்தியா வருவதாகக் கூட இருந்தது. ஆனால் விசா பிரச்சனையால் வர முடியாமல் போனது. தற்போது அவர் மீண்டும் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தயாரிக்கபடும் வயது வந்தோருக்கு மட்டும் (For Adults Only) என்ற ஆபாச-திகில் படம் ஒன்றுக்கு சர்ச்சைக்குரிய திரைப்பட தயாரிப்பாளர் பைசல் சயிப், கிம் கர்தாஷியனை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பைசல் சயிப் கூறியதாவது:–
ஆமாம் நாங்கள், கிம் கர்தாஷியனை அணுகினோம். எங்களுக்கு தெரியும் அவர் ஒரு சிறப்பு கட்டத்தில் இருக்கிறார் என்று. நாங்கள் அவருக்காக காத்திருக்க தயாராக உள்ளோம். நான் எனது படத்தில் கிம் கர்தாஷியனை நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார்.
மேலும் சயிப் தனது கோரிக்கையை கர்தாஷியன் ஏற்று கொள்வார் என நம்பிக்கையுடன் உள்ளார். ’வயது வந்தோருக்கு மட்டும்’ படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தை டைமன்சன் நிறுவனம் தயாரிக்கிறது.
சயிப் இந்த படத்தின் படபிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் நடிக்கிறார்

No comments:

Post a Comment