Friday, 5 June 2015

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை வெளியிடக்கூடாது.. கோர்ட் அதிரடி..!


டார்லிங் படத்திற்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் ’த்ரிஷா இல்லனா நயன்தாரா’.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ் நடிக்க, முக்கிய வேடத்தில் சிம்ரன் நடித்துள்ளார். அதோடு நடிகை ப்ரியா ஆனந்த இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தின் டீஸர் இளம் தலைமுறையினரிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. டீஸரில் இடம்பெறும், ”வெர்ஜின் பசங்க சாபம் உங்களை சும்மாவே விடாது டீ…” என்ற வாக்கியம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் இப்படத்தை வெளியீட இடைக்கால தடை விதித்துள்ளது உயர்நீதி மன்றம்.
இப்படத்தின் தயாரிப்பாளர் சி.ஜெ.ஜெயக்குமார், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.75 லட்சம் வரை பாக்கி தர வேண்டியிருக்கிறது. சி.ஜெ.ஜெயக்குமார் தந்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது.
இந்நிலையில், பணம் வேண்டியும், தன் பணத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தை வெளியிடவோ, விற்கவோ கூடாது எனவும், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 4.6.2015-க்குள் கடன் தொகை செலுத்த சி.ஜெ.ஜெயக்குமார் உறுதியளிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் ”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படம் ஜப்தி செய்யப்படும் எனவும் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.
நேற்று 4.6.2015 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கடன் தொகைக்கு சி.ஜெ.ஜெயக்குமார் உரிய உறுதியளிக்கவில்லை. எனவே, இரண்டு வாரத்திற்குள் ரூ.75 லட்சம் பாக்கிக்கு ஈடாக சொத்து தரவேண்டும் என்றும். ”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தை வெளியிட தடைவிதித்தும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment