Thursday, 4 June 2015

அஜித்துக்கு அப்புறம் நான் தான்.. லட்சுமி மேனனால் கடுப்பில் இருக்கும் ஸ்ருதி


புலி படத்தை தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாக வீரம் சிவா இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, அஜித் மற்றும் அவருக்கு தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனனை வைத்து பின்னி மில்லில் படமாக்கினார் சிவா. அடுத்தக்கட்ட படிப்பில் ஸ்ருதிஹாசன் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
வீரம் படத்தில் தம்பிகள் மீது பாசம் கொண்டவராக அஜித்தை காண்பித்த சிவா, இந்த படத்தில் தங்கை மீது பாசம் கொண்டவராக காண்பிக்க இருக்கிறாராம். அஜித்துக்கு தங்கையாக இப்படத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்த நிலையில் லட்சுமி மேனன் ஒப்புக்கொண்டது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது.
அவர் ஒப்புக்கொண்டதுக்கு காரணம் படத்தில் அண்ணன்-தங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் அழுத்தமாக இருப்பதினால்தானாம். அதோடு, இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகி என்றாலும் அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லையாம். அதாவது அஜித்தை காதல் செய்யும் சில காட்சிகளில், பாடல்களில் வந்துவிட்டு சென்று விடுவாராம்.
அந்த வகையில், கதையில் வரும் பிரச்னைகள் முழுக்க முழுக்க லட்சுமிமேனனை சுற்றித்தான் உள்ளதாம். அவருக்காக அண்ணன் அஜித் போராடுவதுதான் இந்த படமாம். அதனால், தனது அபிமானிகளிடம் இந்த படத்தில் அஜித்துக்கு அடுத்தபடியாக எல்லாமே நான்தான் என்பது போல கூறி வருகிறாராம் லட்சுமிமேனன்.
அவரது இந்த பேச்சினால் அவர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் ஸ்ருதிஹாசன். என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..

No comments:

Post a Comment