Thursday, 4 June 2015

தீபிகா, சோனாக்‌ஷியை அடுத்து வித்யா பாலன்..? இது ரஜினி பட ரகசியம்..!


லிங்கா படத்திற்கு பிறகு சூப்பார் ஸ்டார் ரஜினி ‘அட்டகத்தி’, ’மெட்ராஸ்’ படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.
இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தில் மலேசிய தாதாவாக நடிக்கும்ரஜினிக்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டது. பின்னர் ஜோடி உண்டு, டூயட் இல்லை... நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்றெல்லாம் செய்தி பரவி வந்தது.
ஆனால் தற்போது இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக ரஜினி நடித்த படங்களில் பாலிவுட் ஹீரோயின்கள் தான் நடித்து வருகின்றனர். எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயும், கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனேவும், லிங்கா படத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவும் நடித்தனர்.
தற்போது இந்தப் படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்களின் பெயர்களே பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அதில் வித்யா பாலனுக்கே அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேட்டபோது, 'படத்தின் கதாநாயகி உண்டு. ஆனால் அவர் யார் என்பதை விரைவில் அறிவிக்கிறோம். நிச்சயமாக நயன்தாரா இந்தப் படத்தில் நாயகி அல்ல.." என்றார். இந்த நிலையில்தான், இந்தப் படத்தில் வித்யா பாலன் நாயகியாக நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் பாங்காக், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment