தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல், அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, நடிகர்களுக்குள் பனிப்போர் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சரத்குமார் அணி, விஷால் அணி என இரு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் கடும் வாக்கு வாதம் செய்து வருகின்றனர். நடிகர் சங்கத்தில் பெரும் முறைகேடு நடப்பதாக நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
அதோடு ஜூலை 15ஆம் தேதி நடைப்பெறும் நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் விஷால் அணினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க மறுத்தது.
இந்நிலையியில், “நடிகர் சங்க விவகாரங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் திருமண மண்டபம் கட்ட சொன்னார்கள். அதைவிட வருமானம் தரக் கூடிய வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் போட்டோம்.
அப்போதெல்லாம் குற்றம் சொல்லாதவர்கள், எங்களை சந்தித்து எந்த கருத்தும் சொல்லாதவர்கள், தற்போது தேவையில்லாமல் அவதூறு செய்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னால் அரசியல் சதி இருக்கிறது” என சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இப்படி நடிசர் சங்க கட்டப் பிரச்னை நாளுக்கு நாள் விஸ்பரூபம் எடுத்து வரும் நிலையில், முன்னணி நடிகர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் ஆகியோர் இதுவரை
வாய் திறந்து ஒரு கருத்து கூட தெரிவிக்கவில்லை.
வாய் திறந்து ஒரு கருத்து கூட தெரிவிக்கவில்லை.
ஆனால் நடிகர்கள் சிவகுமார், பொன்வண்ணன், கருணாஸ், ஆனந்தராஜ் ஆகியோர் விஷாலுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, தனது சகோதரர் கார்த்தி பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
Related posts
No comments:
Post a Comment