இயக்குநர் ராதா மோகன் இயக்கிய ‘கௌரவம்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாமி கௌதம். தமிழில் ஒரு படமே மட்டுமே நடித்துள்ள இவருக்கு பாலிவுட்டில் செம்ம கிரேஸ் இருக்கிறது. அதைத்தவிர தெலுங்கு, கன்னடத்திலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது.
தற்போது இவர் ‘தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்ற தமிழ் படத்திலும், இந்தியில், புல்கிட் சாம்ராட் என்ற நடிகருடன் ‘சனம் ரே’ (sanam re) என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் ’சனம் ரே’ படத்தில் நடிக்கும்போது புல்கிட் சாம்ராட்டுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டதாக இந்தி திரையு லகில் கூறுகின்றனர்.
‘படப்பிடிப்பில் சாம்ராட்டின் கேரவனில்தான் யாமி காத்திருப்பார். இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடச் செல்வார்கள். ஷூட்டிங் முடிந்ததும் ஒன்றாகவே வெளியே செல்வார்கள். நட்பைத் தாண்டிய விஷயம் அவர்களிடம் இருக்கிறது’ என்று பட யூனிட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
‘இன்னும் இரண்டு படங்களில் சாம்ராட்டுடன் யாமி நடிக்க இருக்கிறார். சாம்ராட் ஏற்கனவே திருமணம் ஆனவர்’ என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment